×

கொத்திமங்கலம் கூட்ரோட்டில் தேங்கி நிற்கும் மழைநீர்: வாகன ஓட்டிகள் அவதி

 

திருக்கழுக்குன்றம்: கொத்திமங்கலம் கூட்ரோட்டில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். திருக்கழுக்குன்றம் அருகேயுள்ள கொத்திமங்கலம் பகுதியில் கல்பாக்கம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் நகரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் கூட்ரோடு உள்ளது.

இந்த கூட்ரோடு பகுதியில் திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு பிரியும் இடத்தில் சாலை பள்ளமாக இருப்பதால், லேசான மழை பெய்தாலும் கூட அந்த இடத்தில் குட்டை போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழைக்காலத்தில் மட்டுமல்லாமல் மழை நின்று பல நாட்கள் ஆனாலும் அங்கு சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாய நிலையும் உள்ளது.

மேலும் அவ்வழியே செல்லும் வாகனங்கள், அந்த சாக்கடை தண்ணீர் உள்ள பகுதியில் வேகமாக கடப்பதால், சாக்கடை தண்ணீர் பைக்கில் செல்பவர்கள் மீதும், நடந்து செல்பவர்கள் மீதும் தெரித்து விடுகிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்குமாறு வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கொத்திமங்கலம் கூட்ரோட்டில் தேங்கி நிற்கும் மழைநீர்: வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Kothimangalam Koodrod ,Thirukkalukkunram ,Kothimangalam road ,Thirukkalukunram ,
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்